BBS இற்கு உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குகின்றனர் - ராஜித
பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பதவி பறிபோய் விடும் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள், பொதுபல சேனாவின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கின்றனர்.
பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் பொதுபல சேனாவின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுகின்றனர்.
பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்தா விதானகே ஐக்கிய நாடுகள் அமைப்பின் திட்டமொன்றில் பணியாற்றுகின்றார். அல்லது திட்டத்தின் வாகனமொன்றை பயன்படுத்துகின்றார் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளேடு ஒன்றின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment