Saturday, July 5, 2014

அமெரிக்காவின் துணை ராணுவ காவல்துறை. Andre Damon

கடந்த வாரம் அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் War Comes Home: The Excessive Militarization of American Policing என்ற ஓர் அறிக்கையினை வெளியிட்டது, அது நாடெங்கிலும் ”துணை இராணுவ காவல்” படைகளுக்கு ஆயுதமளிப்பதில் அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் விளக்கத்தினை அளிக்கிறது.

தற்போது – வன்முறையில்லாத குற்றங்களுக்கான ஆணை பிறப்பிப்பது உள்ளிட்ட வழக்கமான காவல்துறை பணிகளுக்கு SWAT குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பின்னிரவில் நடத்தப்படுகின்ற SWAT குழுக்களின் அதிரடி சோதனைகளில், இராணுவத்தின் அதிர்ச்சியூட்டும் எறிகுண்டுகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதோடு தேவையில்லாமல் சொத்துக்களை அழிப்பதும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை கொல்வதும் நடக்கும், அத்துடன் “சந்தேகிக்கப்படுவோர்” மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் இதுபோன்று 125 க்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

காரணமில்லாத தேடல்கள் மற்றும் கைப்பற்றல்களுக்கு எதிரான தடை உள்ளிட்ட அரசியலமைப்பு பாதுகாப்புகள், தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ”முன்னறிவிப்பில்லாத” ஆணைகளைப் பயன்படுத்துவதன் மூலம் புறக்கணிக்கப்படுகின்றன.

உள்ளூர் பொலீஸ் படைகளை இராணுவமயமாக்குவதை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான கூட்டாட்சி அரசின் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4.3 பில்லியன்களுக்கும் அதிகமான இராணுவப் பொருட்கள் காவல் துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, “யுத்த போராளி முதல் குற்றப் போராளி வரை” என்பது அத்தகைய ஒரு பாதுகாப்புத் துறை திட்டத்தின் குறிக்கோளில் உள்ளடங்குகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பின் தந்திரோபாயங்கள் உள்நாட்டு அடக்குமுறைக்காக கையாளப்படுகின்றன.

எந்தவித அரசியல் ஆலோசனையோ அல்லது மேற்பார்வையோ இல்லாமல் அமெரிக்காவின் பயன்பாட்டிற்காக அதிர்ச்சிகரமான எண்ணிக்கையிலான இராணுவ உபகரணங்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளன. 500 Mine Resistant Ambush Protected (MRAP) களுக்காக SWAT குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன, அவற்றால் சாலைப் பகுதி குண்டுகளைத் தாக்குபிடிக்க முடியும் என்பதுடன் பளுவான எந்திர துப்பாக்கிகள் மற்றும் தானியங்கி எறிகுண்டு செயல்படுத்திகளை ஏற்றும் சக்தி கொண்டவை. அவர்களுக்கு போர் சீருடைகள், இரவில் பார்ப்பதற்க்கான மூக்கு கண்ணாடிகள், மறைந்திருந்து சுடும் துப்பாக்கிகள் (sniper rifles) மற்றும் தாக்கும் துப்பாக்கிகள் (assault rifles), வார் பொருத்தப்பட்ட எந்திர துப்பாக்கிகள் மற்றும் பிரபல Black Hawk மற்றும் Huey உள்ளிட்ட இராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

உள்ளூர் காவல் துறையை இராணுவமயமாக்குவது என்பது சமுதாய செயல்பாடுகள் தீவிரமாக பிறழ்சியடைந்த நிலையின் ஓர் அறிகுறியாகும். சமூகத் தேவைகளான – கல்வி, ஓய்வூதியம், சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவற்றிற்கான பணமில்லை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அரசியல் நிர்வாகம் தவறாமல் தெரிவிக்கும் அதே வேளையில், காவல் துறையை சமீபத்திய உபகரணங்களுடன் தயார்படுத்துவதற்காக மட்டும் பில்லியன் கணக்கான டாலர்கள் பணம் உள்ளது.

அமெரிக்காவில், ஒவ்வொரு சமூக பிரச்சனையும் காவல்துறையின் விஷயம் போல் அணுகப்படுகிறது. பிற வளர்ந்த நாடுகள் அனைத்தின் ஒன்று சேர்ந்த சிறை எண்ணிக்கையை விட அமெரிக்க சிறையில் அடைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். உலகின் மீதமுள்ள வளர்ந்த நாடுகளனைத்திலும் தடை செய்யப்பட்டுள்ள கொலைத் தண்டனையை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்களை நொருக்கித்தள்ளும் இந்த அரக்கத்தனமான அமைப்பிற்கு மகுடம் சூட்டப்படுகிறது.

தண்டனையிலிருந்து தப்பிச் செயல்பட முடியும் என்று காவல் துறை அதிகம் நம்புகிறது. சமீபத்தில் அதிக அளவிலான காவல்துறை கொலைகள் நிகழ்ந்துள்ளது. மார்ச் மாதம் நியூ மெக்சிக்கோ, ஆல்பக்யூவர்கியூவில் வீடியோ காமிராவில் பதிவான ஒரு வீடில்லாத மனிதன் மீதான சம்பவம் பரந்த அளவிலான கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் இத்தகையை சம்பவங்கள் வழக்கமாக நிகழ்பவைதான்.

அமெரிக்கா பெருமளவில் ஒரு காவல் படைசூழ்ந்த மாநிலத்தின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகள் உண்மையில் இராணுவப் பகுதிகள் போல் மாறியுள்ளன, அங்கு அரசியலமைப்பு உரிமைகள் என்பவற்றிக்கு அர்த்தமில்லை. அமெரிக்க வான் பகுதிகளில் ஏற்கெனவே இராணுவத்தின் ட்ரோன், அதன் பரந்த அளவிலான பயன்பாட்டிற்கான திட்டங்கள் தயார் நிலையில் கொண்டுள்ளன. விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்கங்கள்... மற்றும் பல இடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய காவல் துறை மற்றும் இராணுவத்தாருக்கு அமெரிக்க மக்களை பழக்கப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருமளவு எந்த வித சட்டபூர்வமான அல்லது ஜனநாயக மேற்பார்வைக்கும் வெளியிலிருந்து செயல்பவதும் மற்றும் மக்களின் தினசரி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதுமாகிய பெரும் இராணுவ எந்திரங்களின் ஒரு பகுதியே இராணுவமயமாக்கப்பட்ட காவல்துறை. மக்களின் இயக்கங்கள், தொடர்புகள் மற்றும் நெருக்கமான தனிநபர் தகவல்களை கண்காணிப்பதும், அதிக அளவில் NSA இன் உளவுத் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதும்தான் இந்த உள்நாட்டு காவல்துறை.

அமெரிக்க சமுதாயத்தை இராணுவமயமாக்குவதென்பது போன வருடம் பாஸ்டனை கட்டுப்பாட்டில் வைத்தலில் அதாவது பாஸ்டன் மரதன் குண்டுவெடிப்புகளின் பின் விளைவுகளிலேயே பெருமளவு வெளிப்படுத்தப்பட்டது, அப்போது போர் சீருடைகளிலும், தாக்குதல் துப்பாக்கிகளுடனும் படைகள் வீட்டுக்கு-வீடு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நகரில் குடியிருப்பவர்கள் “அந்தந்த இடங்களிலேயே தங்கிவிடுமாறு” அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வும்– இப்ராஹிம் டோடஷேவின் அடுத்தடுத்த மாநிலக் கொலைச் சம்பவங்களும் - அரசியல் ஸ்தாபகம் அல்லது ஊடகத்திடமிருந்து ஒரு எதிர்ப்புக் குரலுமின்றி கடந்து போயிருக்கிறது.

பரந்த ஒடுக்கு முறை கருவிகளை உருவாக்குவது, தடையில்லாத இராணுவ வன்முறை மற்றும் தீவிர சமூக சமத்துவமின்மையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. வெளிநாட்டில், அமெரிக்க ஆளும் தட்டு நிரந்தரமான போர் போன்ற ஒரு நிலைமையில் உள்ளது. நிதிப் பிரபுத்துவத்தின் நலனை தொடர்வதில் ஒவ்வொரு நாடாக ஊடுருவுவது, உள்நாட்டிலும் எதிரொலிக்கவே செய்யும்.

ஒரு வருடத்திற்கு 1 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவில் நிதியளிக்கப்பட்டு - போர்கள் அரக்கத்தனமான இராணுவ கருவிகளால் செயல்படுத்தப்படுகின்றன – அதில் ஈராக், ஆஃப்கானிஸ்தான், லிபியா அல்லது சிரியா மக்களுக்கு இருப்பதை விட, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த வித மரியாதையும் கிடையாது. மேலும் இந்த முழு வடிவத்தையும் தலைமை தாங்குவது, முறையாக திட்டம் தீட்டி, குறைந்தபட்சம் நான்கு அமெரிக்க குடிமக்களின் மற்றும் பிற ஆயிரக்கணக்கான மக்களின் வான் வழி ஏவுகணை கொலைகளை மேற்பார்வையிட்டிருக்கும் ஜனாதிபதி, அவர் ஒரு சுயமாக கற்றறிந்த கொலைகாரர்.

வெளிநாட்டுக் கொள்ளை, உள்நாட்டுக் கொள்ளையுடன் இணைந்து கொள்கிறது. சராசரி குடும்ப வருமானம் 2007-2008 க்கு இடையில் 8 சதவீதமாக குறைந்திருக்கும் வேளையில், பெரும் செல்வந்தர்களின் செல்வம் 2009 லிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்க சமுதாயத்தை ஆதிக்கம் செலுத்தும் நிதிய தன்னலம் அதன் செல்வத்தை பெருமளவில், 2008 நிதி சரிவிற்கு இட்டுச் சென்ற வகையான ஊகங்கள், மோசடி மற்றும் ஒட்டுண்ணித்தனம் உள்ளிட்ட குற்றவாளித்தனமான மற்றும் பகுதி குற்றமுள்ள நடவடிக்கைகள் மூலமாகவே பெறுகிறது.

அமெரிக்காவில் பொலிஸ் அரச கட்டமைப்பினை உருவாக்குவது என்பது தனது செல்வம் மற்றும் சலுகைகளை பாதுகாப்பதன் நிரந்தர பயத்தில் ஆளும் வர்க்கம் வாழ்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் - அதன் ஆட்சிக்கு பரந்த அளவிலான விரோதத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பது நன்கு அறிந்ததே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com