வல்லப்பட்டையுடன் 8 பேர் கைது! (படங்கள் இணைப்பு)
விற்பனைக்காக வல்லப்பட்டையை கொண்டு சென்ற 8 பேரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பிலிருந்து நோர்வூட் நோக்கி சென்றபோது இன்று விடியற்காலை 3 மணியளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் பகுதியில் வைத்து கெப் ரக வாகனமொன்றில் வல்லப்பட்டையை விற்பனைக்காக கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்படி நபர்களை சுற்றிவளைத்து விசாரணைக்குட்படுத்தியபின் கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபர்களிடமிருந்து கைப்பற்றிய வல்லப்பட்டை 750 கிராம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு, கண்டி,மாத்தளை, இராகலை மற்றும் நோர்வூட் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பிரதான சந்தேக நபர் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 10 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் கைதான சந்தேக நபர்கள் இன்று (6) ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வ+ட் பொலிஸார் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment