ரூபா 76 இலட்சம் பெறுமதியான தங்கத்தை உள்ளடையில் மறைத்து இந்திய செல்லமுனைந்த பெண் கைது!
ரூபா 76 இலட்சம் பெறுமதியான தங்கத் துண்டுகள் நான்கினை தனது உள்ளாடையில் மறைத்து பெங்களுர் நோக்கிப் பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கைப் பெண்ணொருத்தி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கொழும்பு மருதானையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருத்தியாவார்.
கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் நிறை 1129 கிராமாகும்.
குறித்த சந்தேகநபரான பெண், இலங்கை விமானச் சேவைக்குரிய யூ.எல். 773 விமானத்தின் மூலம் பெங்களுர் பயணிப்பதற்கு வந்தபோது, அங்கிருந்த பெண் பாதுகாப்பு அதிகாரிக்கு இவரது உள்ளாடையில் தங்கம் மறைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உடனே, அவர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இதுபற்றி விசாரணை நடாத்துமாறு சுங்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டுள்ள சுங்கப் பணிப்பாளர் திருமதி டீ.எச்.எஸ். புல்லேபெரும சந்தேக நபருக்கு ரூபா ஒரு இலட்சம் தண்டப்பணம் வழங்குமாறு கட்டளையிட்டுள்ளதுடன், தங்கம் அரச உடைமையாக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment