7.224 பில்லியன் ரூபா செலவில் ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டாலும், இதுவரை ஒரு கப்பல் கூட வரவில்லையே!
ரூபா 7.224 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்திற்கு ஒரு கப்பல் கூட வரவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் திணைக்களத்தினால் பொது வியாபாரம் தொடர்பிலான அங்கத்துவச் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இந்த ஒலுவில் துறைமுகம் மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டபோதும், இவ்வருடம் ஜூன் மாதம் இறுதிப் பகுதிவரை கப்பல்களின் வருகை கணிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காகச் செலவு செய்த பணத்தில் 6780 மில்லியன் ரூபா டென்மார்க்கிலிருந்து கடன் உதவியாகப் பெறப்பட்டதாகவும், அந்தக் கடனை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் அடைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகம் அமைக்கப்படும்போது, கப்பல் வரக்கூடிய முறையில் ஆழமாக அதனை நிர்மாணிக்காது, 9 மீட்டர் ஆழத்தில் மட்டுமே அது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சிறிய படகுகள் மாத்திரமே ஒலுவில் துறைமுகத்திற்கு வர முடியும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment