சந்திக்க ஹத்துருசிங்கவுடனான முரண்பாடின் எதிரொலி! ஷகிப் அல் ஹசனுக்கு 6 மாத தடை!
சிறந்த சகலதுறை வீரராக கருதப்படும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆறு மாதகால தடை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுவரை ஷகிப் அல் ஹசன் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலே எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியாதென பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த சந்திக்க ஹத்துருசிங்கவு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சந்திக்க ஹத்துருசிங்கவுடன் முரண்பட்டமை மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஒழுக்கயீனமாக நடந்துகொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் ஷகிப் அல் ஹசன் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் ஷகிப் அல் ஹசனுக்கு ஆறு மாதகால பேட்டித் தடை விதித்துள்ளது.
0 comments :
Post a Comment