62 வயது வயோதிபப் பெண் வல்லுறவு!! வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது!!
62 வயது வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத் திய வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய கண் வைத்தியசாலையில் சுத்திகரிப்பாளராக பணி புரியும் 62 வயது வயோதிபப் பெண் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயகி டி அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் பணியாளர்களாக கடமையாற்றும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த எல்.பொன்சேகா மற்றும் ஆர்.எம். பிரதீப் அலியாஸ் ரெஜி ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணால் மருதானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண் ஜூலை 07ஆம் திகதி இரவு வேளை கடமையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், வைத்தியசாலையில் தொழில் புரியும் இருவரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஏற்கெனவே தனியார் சுத்திகரிப்பு சேவை நிலையமொன்றில் கடமையாற்றிய பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இவ்வைத்தியசாலையில் இணைந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபர்களை கைது செய்த மருதானை பொலிஸார், மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயகி டி அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.
0 comments :
Post a Comment