மேல் மாகாண சபைக்கான அலுவலகங்களின் செலவீனத்தைக் குறைப்பதற்காக புதிய 615 மாடிக் கட்டிடம்...!
வருடாந்தம் ரூபா 300 மில்லியன் பணத்தை மேல் மாகாண சபைக்குச் சொந்தமான அலுவலகங்களை நடாத்திச் செல்வதற்கு செலவாவதாக மேல் மாகாண சபையின் செயலாளர் ஜயந்தி விஜேத்துங்க குறிப்பிடுகிறார்.
மேல் மாகாண சபைக்குச் சொந்தமான முதல்தர அலுவலகங்கள் பல தற்போது கூலி அடிப்படையில் நடாத்தப்பட்டு வருவதாகவும், அதற்காகப் பெருந்தொகைப் பணம் செலவாவதாகவும், அதனால் புதிய கட்டடத் தொகுதியொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஒரே கூரையின் கீழி அனைத்து அலுவலகங்களையும் சேர்த்து, பொதுமக்களுக்கு விரைவாக பணியாற்ற முடியும் எனவும், புதிய கட்டிடமானது 15 மாடிகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்காக ரூபா 4800 மில்லியன் செலவாவதாகவும் மூன்று ஆண்டுகளுக்குள் அது பூர்த்தியடையும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாண சபைக்கு புதிய அலுவலகக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கொழும்பு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment