போர்க்கப்பலில் தீ விபத்து: 5 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை- ஜெட்லி
இந்திய ராணுவத்தில் உள்ள போர்க்கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் ஐஎன்எஸ் விராட் கப்பல் தீ விபத்து தொடர்பாக 5 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி எழுத்துபூர்மாக பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐ.என்.எஸ். விராட் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பலில் தீப்பிடித்தது. விசாரணை ஆணையத்தின் விசாரணைக்குப்பிறகு 5 அதிகாரி உள்பட 6 கடற்படையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த வருடம் ஜூலை மாதம் ஐ.என்.எஸ். தெரசா என்ற ரோந்துக் கப்பலில் தீப்பிடித்தது. இது தொடர்பாக 3 அதிகாரிகள் மற்றும் 4 மாலுமிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடி கப்பலுடன் போர்கப்பல் ஐஎன்எஸ் தல்வார் மோதியது தொடர்பாக 4 அதிகாரிகள் மற்றும் 2 மாலுமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிந்துரக்சக் நீர்மூழ்கி கப்பல் மூழ்கியதில் 18 பேர் இறந்தனர். மிகப்பெரிய இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த கப்பல் தற்போது தண்ணீருக்கு மேலே கொண்டு வரப்பட்டு விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment