Friday, July 25, 2014

அல்ஜீரிய விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் மாலியின் பாலைவன பிரதேசத்தில்!

காணாமல் பேயிருந்த அல்ஜீரியாவின் 5017 விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் மாலியில் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்ஜீரியாவின் 5017 விமானம் வான்பரப்பு தெளிவாக இல்லாமையால், விபத்து ஏற்படுவதனை தடுக்கும் வகையில், விமானத்தின் பயணத்தை மாற்றுமாறு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நைஜர் பகுதியில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் விமானத்தின் சிதைவுகள் மாலியின் வடக்கு பகுதியில் கிடைத்திரு ப்பதாக மாலி ஜனாதிபதி இப்ராகிம் பவ்பகர் கீட்டா ஊடகங்களுக்கு தெரிவித் துள்ளார்.

தமது நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள பாலைவன பிரதேசத்திலேயே விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் கிடைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

பேர்கினோ ஃபஸோவில் இருந்து 116 பேருடன் பயணித்த அல்ஜீரிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்து, ஒரு மணித்தியாலத்தில், தொடர்பு முழுயைமாக அற்றுப்போனதாக அல்ஜீரியா தெரிவித்திருந்ததுடன் 110 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment