பெற்றோரை தாக்கிவிட்டு 4 வயது சிறுவன் கடத்தப்பட்டான் அநுராதபுரத்தில் சம்பவம்!!
அநுராதபுரம் மீகல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் வீட்டில் இருந்த சிறுவன் ஒருவனை முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து நேற்று முன்தினம் இரவு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் 4 வயதான மகன் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளான். பெற்றோருடன் வீட்டில் இருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இவ்வாறு கடத்திச் சென்று ள்ளனர்.
இச்சம்பவத்தின் போது சிறுவனின் பெற்றோறை கடத்தல் காரர்கள் கத்தியால் தாக்கி விட்டே சிறுவனை கடத்திச் சென்றுள்ளமை தெரியவருகின்றது.
குறித்த வர்தகரிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சிறுவன் கடத்தப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரையில் கடத்தல்காரர்கள் தொடர்பிலோ சிறுவன் தொடர்பிலோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகல்லாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment