மோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரியூட்டப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தை: அநுராதபுரத்தில் பரிதாபம்! (படங்கள்)
அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை இனந்தெரியாதவர்களினால் தாக்கி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தையான இஷாக் (39 வயது) என்பவரே கொலை செய்யப் படுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர் அசரிக்கமையிலுள்ள தனது வீட்டிலி ருந்து காலை 8.30 மணியளவில் அநுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார் .
இதன்போது அலி வெட்டுனுவௌ பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலேயே இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரியூட்டப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் ரூபா பணத்தை கொண்டு சென்றதாக முதற்கட்ட விசாரனை களிலிருந்து தெரியவந்துள்ளது.அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment