கர்தினால்கள் உட்பட கத்தோலிக்க தேவாலய மதகுருமார்களில் 2 வீதமானோர், சிறுவர் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வோர்!
கர்தினால்கள் உட்பட கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ள மதகுருமார்களில் 2 வீதமானோர், சிறுவர் துஸ்பிரயோ கங்களை மேற்கொள்வோர் என பாப்பரசர் மதிப்பீடு செய்துள்ளதாக, இத்தாலிய செய்தி தாளொன்று கூறுகின் றது.
இந்த கத்தோலிக்க மதகுருமாரின் சிறுவர் துஸ்பிரயோகம் தெழுநோய் போன்ற ஒரு பயங்கர நோயாகுமென, பாப் ஆண்டவர் தெரிவித்ததாக, ரிபப்லிகா செய்தி தாள் தெரிவிக்கின்றது. ரோமன் கத்தோலிக்க மதகுருமாருக்கு திருமணம் செய்ய தடை ஏற்படுத்தும் தற்போதைய சட்டங்கள் விரைவில் மாற்றப்படுமென்றும், பாப்பாண்டவர் தெரிவித்துள்ளதாக, அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
எனினும் அப்பத்திரிகை பாப்பாண்டவரின் அதே வார்த்தைகளால் செய்தியை பிரசுரிக்கவில்லையென, பாப்பாண்டவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment