அநுர ஜனாதிபதியானால் அமைச்சரவை உறுப்பினர்கள் 25 பேர் மட்டுமே!
தனது கட்சி ஆட்சிபீடமேறினால் அமைச்சரவை உறுப்பினர்களை 25 பேராக குறைத்து, அதனை யாப்பினில் இணைப்பேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகிறார்.
ஹலாவத்தையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -
“மகிந்த ராஜபக்ஷ அமைச்சரவையின் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அமைச்சரை நியமிக்கிறார். என்றாலும் அதிகாரம் எல்லாம் ஜனாதிபதியின் கையிலேயே தங்கியிருக்கின்றது. அதுதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் பயங்கர நிலைப்பாடு.
மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்கள் வெறும் 25 பேர் மட்டுமே இருப்பர். அதனை யாராலும் மாற்றமுடியாத வண்ணம் அரசியலமைப்பை மாற்றியமைப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment