அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 25 ஆண்டு நினைவஞ்சலி லண்டனில்.
புலிப்பாஸிசத்திற்கு 25 வருடங்களுக்கு முன்னர் இரையான தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் 25 வது ஆண்டு நினைவஞ்சலி லண்டனில் எதிர்வரும் 12ம் திகதி பி.ப 4.30 மணியளவில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலாநிதி ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்தவுள்ளார்.
லண்டன் போனுஸ் பாஸ்ரர் கத்தோலிக்க கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் விடுதலைக் கூட்டணிக்கிளை யினர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
அமரர் அமிர்தலிங்கம் அவர்களுடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் விடுதலைக் கூட்டணியின் இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவருமான அமரர் திரு யோகேஸ்வரன் அவர்களும் பாஸிசத்தால் காவு கொள்ளப்பட்டிருந்தமையும், அவரது மனையையும் பின்னாட்களில் புலிப்பாஸிசம் படுகொலை செய்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.
0 comments :
Post a Comment