அன்று அரசாங்கத்திற்கு கையளித்த 220 கிலோ தங்கமும் எங்கே? - பொன்சேக்கா
இராணுவத் தளபதியாக தான் இருந்தபோது, மீட்டெடுக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளித்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது என்று முன்னாள் இராணுவத் தளபத்தி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
இரு பெட்டிகளில் தங்க ஆபரணங்களை நாங்கள் கையளித்திருந்தோம். நலஙிகள் மீட்டெடுத்து ஒப்படைத்த 220 கிலோ கிராம் தங்கத்திற்கு என்ன நடந்த்து என்று எவருக்கும் தெரியாது. பின்னர் பசில் ராஜபக்ஷவிடம் இதுபற்றிக் கெட்டபோது 110 கிலோ கிராம் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இது சரி அரைவாசித் தொகையாகும் என ஆங்கில ஊடகமொன்றுக்கான பேட்டியொன்றில் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
அந்த்த் தங்கத்துக்கு என்ன நடந்த்து என்பதை இப்போது நாம் அறியோம். உரிமையாளர்களின் பெயர்களுடன் தங்கப் பொதிகள் இருந்தன. விடுதலைப் புலிகளின் வங்கியில் பெருந்தொகையான தமிழர்கள் தங்கத்தை வைப்புச் செய்திருந்தனர். பெரும்பாலானவை மக்களின் ஆபரணங்களாகும்.
உரிமையாளர்களுக்கு மிக இலகுவாக அந்த ஆபரணங்களை அரசாங்கத்தால் வழங்க முடியும். அது வழங்கப்படும் என நான் நினைக்கவில்லை.
தங்கத்தை அரசாங்கம் திரும்பக் கொடுத்திருந்தால், பட்டியல் போட்டு நாங்கள் அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம் என அரசாங்கத்தால் சொல்ல முடியும் எனவும் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment