2015 சுதந்திர தின விழா வீரகெட்டியவில்…!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 67 ஆவது தேசிய சுதந்திர தினத்தை வீரக்கெட்டிய நகரில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாத்தறையில் நடைபெறுகின்ற “தெயட்ட கிருலு” (தேசத்திற்கு மகுடம்) கண்காட்சியுன் தொடர்புற்றதாய் நடைபெறவுள்ள இவ்விழாவிற்குத் தகுந்த இடமொன்றைத் தெரிவு செய்வதற்காக அரச நிருவாக மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே செனவிரத்ன, பிரதியமைச்சர் விஜய தகநாயக்க போன்றோரும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று (22) வீரக்கெட்டிய பிரதேசத்தில் ஆய்வுக்கான சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
அங்கு தங்கல்ல - வீரக்கெட்டிய பாதை மற்றும் வீரக்கெட்டிய - மித்தெனிய வீதிக்கு அருகாமையில் பொருத்தமான இரு இடங்களைக் கருத்திற் கொண்டுள்ளதுடன், அது தொடர்பான கலந்துரையாடல் வீரக்கெட்டிய பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்களுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர், வீரக்கெட்டிய பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment