200 அடி பள்ளத்தில் பாய்ந்து பஸ்! 12 பேர் படு காயம்!
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவெல்லவாய பிர தான வீதியில் கதிர்காமத்திலிருந்து பண்டாரவளை நோக்கி சென்றவேன் ஒன்று எல்ல பிரதேசத்தில் 15ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டுவிலகி 200 அடிபள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் படு காயமடைந்து எல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த 12 பேரில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாகனசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் ஜவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இரு சிறுகுழந்தைகள் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டா ரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்லபொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment