செய்க் கொலையுடனும், விக்டோரியா கற்பழிப்புடனும் தொடர்புடைய தங்கல்லை பிரதேச சபை உறுப்பினருக்கு 20 வருட கடூழியச்சிறை
பிரித்தானியரான குராம் செய்க் என்பவரைக் கொலை செய்து, அவரின் காதலியான விக்டோரியாவை கூட்டுக் கற்பழிப்பு செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள தங்கல்ல பிரதேச சபை உறுப்பினருக்கும் அந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மற்றும் நால்வருக்கும் கொழும்பு மேல்நீதிமன்ற 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு நத்தால் தினத்தன்று தங்காலை நேசர் ரீஸோர்ட் ஹோட்டலிலேயே இந்தக் கொலையும், கற்பழிப்பும் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இதுதொடர்பிலான வழக்கு இரண்டரை வருடங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதுடன், மேல்நீதிமன்ற நீதிபதி ரோஹிணி வல்கமவினால் 20 வருட சிறைக்கான ஆணையிடப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment