ஓபாமாவை கொல்ல விஷம் தடவிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொல்ல விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தோடு 3.67 லட்சம் டாலர் அபராதமும் விதித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்டார். பின்னர், அது பொய் என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இந்நிலையில், இந்த நீதிமன்றம், நடிகை ஷனானுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
0 comments :
Post a Comment