வனராஜா தோட்டத்தில் 18வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம்; நேற்று (02) மாலை இடம் பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்தசிறுமி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்தள்ளது.
சிறுமி தற்கொலை செய்துகொண்டமைகான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment