17 பெண்களை திருமண ஆசைகாட்டி மோசடி செய்த நபர் கைது!
இணையத்தளம் ஊடாக திருமண யோசனைகளை முன் வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 17 யுவதி களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக உத்தி யோகத்தர்களால் இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப் பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர் சில யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளமை குறித்தும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோசடிக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 யுவதிகளின் படங்களும் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாயிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment