கத்திக்குத்துக்கு இலக்காகி 17 வயது மாணவன் பலி!
ஊரகஸ்மன்ஹந்தியவில் நேற்று மாலை இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார். இன்னொரு பாடசாலை மாணவனாலேயே குறித்த மாணவன் மீது கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
பெந்தோட்டை மஹவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணமடைந்த மாணவனுக்கும் சந்தேக நபருக்கும் .இடையில் நீண்ட காலமாக மனக்கசப்பு இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(கேஎப்)
0 comments :
Post a Comment