Tuesday, July 15, 2014

1,600 வீடுகள் சேதம்! 6,000 பேர் வரை பாதிப்பு! (படங்கள்)

நாட்டின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றினால் 6,000 பேர் வரை பாதிகப்புகளுள்கு உள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் குறிப்பிடுகின்றார்.

கடுங்காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களை கருத்திற்கொண்டு, பதுளை மாவட்டத்தில் 80 பாடசாலைகள் கடந்த 2 தினங்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை, கடுங்காற்றினால் வலப்பனை பிரதேசத்திலுள்ள 03 பாடசாலைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்திலேயே அதிக சேதங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். கடுங்காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

காற்றினால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் வீசிய பலத்த காற்று குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளில் தென்மேல் பருவகாற்று தொடர்ந்தும் வீசும் என திணைக்களத்தின் வானிலை தொடர்பாடல் அதிகாரி லக்ஷ்மி லத்தீப் தெரிவிக்கின்றார்.

(க.கிஷாந்தன்)

No comments:

Post a Comment