ஆட்டோக்களைக் திருடிச் சென்று உதிரிப்பாகங்களை விற்பனை செய்த 14 வயது சிறுவன் கொழும்பில் கைது .....
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளை கடத்திச் சென்று அவற்றின் உதிரிப்பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் கிரேன்ட்பாஸ் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கிரேன்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இவரிடமிருந்து முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment