Saturday, July 5, 2014

யாழ் - வவுனியா பஸ் தடம்புரண்டது! ஒருவர் பலி 14 பேர் காயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ள துடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்தில் ஆர்.டபிள்யூ.ரட்நாயக்க என்பவர் பலியாகியுள்ளார் இவரது சடலம் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்த 6 மாத குழந்தை உட்பட 14 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் பு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com