பெண்ணின் தலையில் 11 செ.மீ அளவிற்கு பாய்ந்த கத்தி....... ( படங்கள்)
சீனாவில் பெண்ணின் தலையில் 11 செ.மீற்றர் அளவிற்கு கத்தி இறங்கியுள்ளது. சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா (57). இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். அப்போது கீழே இருந்த கத்தி ஒன்று அவரது தலையில் 11 செ. மீற்றர் அளவிற்கு உள்ளே சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததில், அவரது தலையில் இருந்த கத்தி எடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய மகளும் மருமகனும் மருத்துவமனை பில்தொகையை கட்டுவதற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை விற்று அவருக்கு மருத்துவம் பார்த்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment