மோடியின் அரசாங்கம் 1,080 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்க தீர்மானம்!
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிகளை அதிகரிக்கும் வகையில் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிணங்க இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் புதிய அரசாங்கம் 1,080 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கம் ஏனைய நாடுகளில் முன்னெடுக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு செயற்றிட்டத்தின்கீழ் இலங்கைக்கான நிதி உதவி வழங்கபடவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்ற வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தபோது இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment