Sunday, July 6, 2014

104 வீடுகளை யுத்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

நமக்காக நாம் வீடமைப்பு திட்டத்தின் 16 வது கட்டதின் கீழ் அநுராதபுர மாவட்டத்தில் நிர்மானிக்கப்பட்ட 104 வீடுகளை முப்படை வீர்ரகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (05) அ/ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது ஹொரவபொதான, மூகலான, மொரகட பிரதேச யுத்தத்தின் போது காலம் சென்ற இராணுவ விரர் / 552416 கோப்ரல் அமரசூர்ய மற்றும் ஹொரவபொதான கபுகொல்லாவ வீதி மொறவெவ பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ விரர் /467563 லான்ஸ் கோப்ரல் கருனாரத்ன என்பவர்களுக்கு நிர்மானிக்கப்பட்ட வீடுகள் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் அ/ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் பிரதான உற்சவம் நடைபெற்றது.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை 2009 ஆம் ஆண்டு முற்றாக ஒழிப்பதற்கு அயராது உழைத்த மற்றும் உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களை கௌரவிக்கும் நோக்குடன் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வழி காட்டலின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய 2009 ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சொந்தமாக வீடு மற்றும் காணி பெற்றுக் கொள்ள பொருளாதார வசதி இல்லாத இராணுவ வீரர்களுக்கு நிவாரணமளிப்பதே இத்திட்டதின் நோக்கமாகும்.

“நமக்காக நாம்” வீட்டுத் திட்டத்திற்கான நிதி வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களினாலும் பொதுமக்களினாலும் வழங்கப்படுவதுடன். கட்டட நிர்மாணப் பணிகள் முப்படை வீரர்களால் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அயோமா ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.

“நமக்காக நாம்” திட்டத்தின் கீழ் இதுவரைகாலமும் 15 கட்டங்களாக கண்டி, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, காலி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கேகாலை, பொலன்னறுவை, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தளை, நுவரெலியா, மற்றும் கொழும்பு ஆகிய 18 மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அநுராதபுர மாவட்ட வீடமைப்பு திட்டதில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை பொறியியல் பிரிவினால் 104 வீடுகள் நிர்மாணிக்கப் பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் 100 விடுகளுக்கான நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இலங்கை தரைப்படையினருக்கு 68 வீடுகள், இலங்கை கடற்படையினருக்கு 23 வீடுகள் இலங்கை விமானப்படையினருக்கு 13 வீடுகள் என பகிர்ந்தளிக்கப்பட்டன.

மேலும் குறித்த மாவட்டத்தின் குறைந்த வசதிகள் கொண்ட கஸ்ட பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி தெடர்பான வேலை திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன் கீழ் ஹொரவபொதான ஆதார கனிஷ்ட வித்தியாலயம், மொரவெவ வித்தியாலயம் அ/ருவன்வெலி மத்திய மகா வித்தியாலயம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் மகா சங்கத்தினர், வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் உட்பட அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே, ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தா மல்லவாரச்சி, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ராஜபக்ஷ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அரச அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பெரும் தொகையான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. வெளிநாடுகளில் தமிழ், தமிழீழம் என்று கோஷங்களுடன் மாவீரர் விழா, விளையாட்டு விழா, வெற்றிவிழா, வீரர் விழா என்று மில்லியன் கணக்கில் செலவிட்டு பெருமிதமடையும் புலம்பெயர் போலித் தமிழினமே தற்போது ஒரு நேர உணவுக்கு கையேந்தும் உங்கள் போராளிகளின் குடும்பங்களுக்கு என்ன செய்தீர்கள்?

    ReplyDelete