Thursday, July 31, 2014

கொழும்பில் ரூ.1 கோடியை மீளப்பெற்ற 17 வயது இளைஞன்......

ஜா-எலயிலுள்ள வங்கியொன்றில் சேமிப்பு கணக்கொன்றை திறந்து, தன்னியக்க இயந்திரத்தின் ஊடாக ஒரு கோடியே 78 இலட்சம் ரூபாவை மீளப்பெற்ற 17 வயதான இளைஞனை கொழும்பு கோட்டை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். அவருடைய வங்கி கணக்கில் ஒரு இலட்சத்து 63 ஆயிரம் ரூபாவே மீதமிருக்கின்றது. இந்நிலையில் அவர், ஒருகோடி ரூபாவிற்கு மேல் மீளப்பெற்றுக்கொண்டுள்ளார் என்று நீதிமன் றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தன்னியக்க இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாவே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று வங்கி தரப்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பி த்துள்ளார். குறித்த இளைஞன், பல்வேறு நகரங்களில் 558 தடவைகள் பணத்தை மீளப்பெற்றுள்ளார். சந்தேக நபரான இளைஞன், கொழும்பு கோட்டே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார். மீளப் பெற்றுக்கொண்ட பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வங்கிக்கு திருப்பிச் செலுத்துவதற்கு அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்தே அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com