மத அடிப்படைவாதத்தைப் பரப்புகின்ற அமைப்புக்கள் பலவற்றைத் தடைசெய்வதற்கு தீர்மானம்!
மத அடிப்படைவாதச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அனைத்து அரசை சார்பற்ற அமைப்புக்களையும் தடைசெய்வதற்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.
வெளிநாடுகள் ஏழிலிருந்து உதவித் தொகை பெறும் அரச சார்பற்ற மத நிறுவனங்கள் 14 இலங்கையில் செயற்படுவதாக இலங்கை புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தயாரித்துள்ள இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி, அறிக்கையை அமெரிக்க தூதுவராயத்திற்கும் அனுப்பிவைத்துள்ளார்.
அவ் இரகசிய அறிக்கைக்கு ஏற்ப, ஒரு மத அடிப்படைவாத அமைப்பில் 150 பேர் கொண்ட ஆயுததாரிகளும் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இம் மத அமைப்புக்களில் 10 கொழும்பில் செயற்படுவதாகவும், ஏனையன ஏனைய மாகாணங்களில் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், குறித்ததொரு அடிப்படைவாத மத அமைப்பு இந்நாட்டில் உள்ள யுத்த விடயங்கள் தொடர்பான முக்கிய விடயங்களையும் வெளிநாட்டு சக்திகளுக்கு அறியக் கொடுத்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் இவ்வமைப்புக்களுக்கு உதவித் தொகை வரும் முறை பற்றி இலங்கை மத்திய வங்கியும் ஆய்வு மேற்கொள்கிறது.
அத்தோடு, குறித்ததொரு மத அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஸ்கெண்டினேவிய அரசுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றார் எனவும், அந்நாட்டு புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கை குடியுரிமை பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் புதிய சட்டதிட்டங்களை ஏற்படுத்துவதற்கு நேற்று முன் தினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments :
Post a Comment