ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து ( படங்கள் கிஷாந்தன்)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டனிலிருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் சிட்டி ரைடர் ரக பஸ் ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பிரதேசத்தை அண்மித்த பகுதியில் 04.06.2014 அன்று காலை 7.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மழையின் காரணமாக பாதை வழுக்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment