Wednesday, June 18, 2014

பொலீவியாவின் அதிஉயர் கௌரவ விருது, இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது!

பொலீவியாவின் அதிஉயர் கௌரவ விருது, இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில், ஜனநாயக பிரதிநிதி மார்செலோ குயிரோகா சென்டா குரூஸ் பாராளுமன்ற விருது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டது. இதுபோன்ற விருதொன்றை வெளிநாட்டு அரச தலைவர் ஒருவருக்குஅந்நாடு வழங்கிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பொலீவிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிஉயர் விருதான ஜனநாயக பிரதிநிதி மார்செலோ குயிராகோ சென்டா குருஸ் பாராளுமன்ற விருது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கும் வைபவம், அந்நாட்டு தேசிய பிரதிநிதிகள் சபையான பொலிவீய பாராளுமன்றத்தில் வைத்து வழங்கப்பட்டது. அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் டேவிட் சொக்குய் குவாங்கா, செஸ்படேஸ் வரவேற்றார்.

சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆற்றி வரும் பணியை பாராட்டும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டது. பொலீவிய உப ஜனாதிபதியும், தேசிய பிரதிநிதிகள் சபையின் தலைவருமான அல்டாரோ கிராசியா லினேரா இதனை வழங்கி வைத்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்து, இலங்கையின் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு வழங்கிய பங்களிப்பை பாராட்டி, ஜனாதிபதி இந்த கௌரவ விருது, பொலிவீயா வழங்குவதாக, அந்நாடு அறிவித்தது. மனித உரி;மைகள், பொலீவியா உட்பட தென்அமெரிக்க நாடுகளுடனான உறவினை பலப்படுத்துவதற்காக, ஜனாதிபதி வழங்கிய பங்களிப்பு, பாராட்டப்பட்டது.

பொலீவிய அரசாங்கத்தின் அதிஉயர் விருதினை பெற்றுக்கொண்டதன் பின்னர், ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முதலாவது விருதாக இது அமைவதனால், இதனை தனது நாட்டுக்கும், தனக்கும் கிடைத்த ஒரு கௌரவமாக கருதுவதாக, கூறினார்.

சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான தனது அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் வழங்கப்பட்ட இக்கௌரவ விருதின் முக்கியத்துவம் தொடாபாக தான் மகிழச்;சியடைவதாகவும், அவர் தெரிவித்தார். அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகள், பாராளுமன்றத்தில் ஆற்றிய முக்கிய கருத்துகளாக தான் கருதுவதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த கௌரவ விருதினை வழங்கும்போது, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை தொடர்பான ஒரு வீரரான பொலீவியாவின் புகழ்பூத்த புதல்வரான பொலிவீய ஜனாதிபதியும், அந்நாட்டு துணை ஜனாதிபதி லூவி எடல்போ சிலெஸ் ஆகியோர் தன்னுடன் இணைந்து கொண்டமையையிட்டு, மன மகிழ்ச்சியடைவதாகவும், அவர் தெரிவித்தார். தமக்கும், தனது தூதுக்குழுவிற்குமு; பொலீவியாவில் வழங்கப்பட்ட வரவேற்பும், மரியாதையும் குறித்து, ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com