Monday, June 2, 2014

"இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா ஒரு தலைப்பட்சமாக தலையிடக்கூடாது" - சுப்ரமணிய சுவாமி

இலங்கைத் தமிழர்களுடன் நாம் பேச்சுக்களை நடத்தவேண்டும். எனினும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி அவ்வாறான பேச்சுக்களை நடத்துவதானது இலங்கையின் இறைமையை மீறும் செயலாக அமைந்துவிடும் என்றும் சுப்ரமணிய சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா ஒரு தலைப் பட்சமாக நேரடியாகத் தலையிடக்கூடாது என சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை நாமே உருவாக்கினோம் என்பதற்காக அங்குள்ள பங்களா தேஷிலுள்ள இந்துக்களுடன் பேசுவதற்கோ அல்லது இந்தியாவிலுள்ள முஸ்லிம் களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ அனுமதிக்க முடியாமா என்றும் அவர் கேள்வியெழுப் பியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கு மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு நேரடியாக அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், வடமாகாண முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் காணப்படும் அரசியல் வேறுபாட்டை குறுகிய நோக்குடன் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

13வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, இலங்கையிடம் நட்பாகக் கோரிக்கை விடுக்கவே எமக்கு முடியும். மத கலவரங்கள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் படிப்படியாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  June 2, 2014 at 10:47 AM  

Dr.Subramaniya swamy a chip off the old block.Every word what he pronounces is very sensible and worthy for the leaders to take into consideration.

Well said Dr.Swamy.congratulations.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com