களத்தில் குதித்தார் மர்வின் சில்வா! பள்ளியில் தங்கியிருந்து தர்காநகரைக் காப்பாராம்!
தர்காநகரின் பாதுகாப்பினை தான் பொறுப்பேற்பதாக பொதுசன உறவுகள் மற்றும் பொதுவிவகாரங்கள் அமைச்சர் மர்வின் சில்வா அறிவித்துள்ளார்.
தர்காநகர் பெரிய பள்ளிவாசலில் தங்கியிருந்து பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாளப்போவதாகவும் மக்கள் தமது பிரச்சினைகளைத் தன்னிடம் தெரிவிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் தர்காநகரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை சந்தித்தபோது, தர்காநகர் பெரிய பள்ளியில் சில நாட்கள் தங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும் பாதுகாப்பினையும் வழங்குவதற்காக செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதாக அங்குள்ள மக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
1 comments :
avvarenin bothu pala senavinarai kaithu seyunkal. athuthan theervu.
Post a Comment