Thursday, June 19, 2014

நடிகை ரஞ்சிதாவுடன் திருப்பதி வந்த நித்தியானந்தா ; பக்தர்கள் கண்டுகொள்ளாததால் கடும் அதிருப்தி...... (வீடியோ)

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று காலை நித்தியா னந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நித்யானந்தா ஆசிரமத்தில் முறையாக தீட்சை பெற்று சன்னியாசியாக மாறிய நடிகை ரஞ்சிதா, அவருடைய ஆசிரமத்திலேயே இருந்து சேவை செய்து வருகிறார். இந்நிலையில் நித்யானந்தா, ரஞ்சிதா உட்பட தனது சீடர்களுடன் நேற்று காலை திருப்பதி வந்தார்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்கு வெளியே வந்த அவரை பலர் கண்டுகொள்ளவில்லை. அவராகவே ஆசிர்வாதம் செய்தபடி கையை காட்டிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அவருக்கு பின்னால் நடிகை ரஞ்சிதா காவி உடையில் இருந்தார். நித்யானந்தா கழுத்தில் மிகப்பெரிய தங்க நகை ஒன்றை அணிந்திருந்தார்.

வெங்கடாஜலபதியை தரிசித்த பின்னர் நித்யானந்தா தனது சீடர்களுடன் கோவிலை சுற்றி வந்தார். அப்போது கோவிலின் திருக்குளத்தின் அருகே வந்து சில நிமிடங்கள் நின்று கோவில் கோபுரத்தை தரிசித்தார். நித்யானந்தாவை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ரஞ்சிதாவை போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் பக்தர்கள் பெரும் ஆர்வம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதியில் உள்ள பக்தர்கள் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்ததால் நித்தியானந்தா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக அவருடைய சீடர்கள் தெரிவி த்தனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com