ஈராக் - மொசுல் நகரத்தைக் கைப்பற்றியுள்ள ஈராக் இஸ்லாமிய அரசாங்கம் மற்றும் லெவண்ட் அமைப்புக்களின் போராளிகள் அங்குள்ள பெண்களை பாலியல் அடிமைகளாக்கிக் கொள்வதற்கு தயாராகுவதாக தெரியவருகின்றது.
நேற்று முன்தினம் விசேட கட்டளையில், மொசுல் பிரதேசவாசிகளிடம் “அப்பிரதேச பெண்களை பாலியல் அடிமைகளாகத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
புனிதப் போர் ஒன்றின்போது படைவீரர்களின் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெண்களைப் பெற்றுக் கொடுத்தல் அரபு மொழியில் ஜிஹாதுல் நிக்காஹ் என்று அழைக்கப்படுகின்றது.
இது முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிரிய ஜனாதிபதி பஷர் அசாத்திற்கு எதிராக போர்புரிந்து கொண்டு இருக்கின்ற கலகக்காரர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பெண்களைப் பெற்றுத் தருமாறு மதகுரு ஒருவரினால் பெட்டா மதக் கட்டளை இடப்பட்டுள்ளது.
சிரியா மற்றம் ஈராக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கட்டியெழுப்புவதற்காக போர்புரிகின்ற ஈராக் இஸ்லாமிய அரசு மற்றும் லெவண்ட் அமைப்பு ஜூன் மாதம் 10 ஆம் திகதி நினேவ் பிராந்திய தலைநகரான மொசுல் நகரத்தினைக் கைப்பற்றினர்.
ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி குறிப்பிடும்போது, இது சவுதி அரேபிய மற்றும் கட்டாரின் உதவியினால் நடைபெறும் தந்திரோபாயமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment