நாங்கள் “பப்பு” அல்ல… முழு நாட்டிலுமுள்ள முஸ்லிம்கள் பெருங் கவலையோடு…!
தங்கள் கட்சி “பப்பு” அல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகிறார்.
அளுத்கம விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்க்கட்சியுடன் இணைந்துவிடுமோ என சிலர் கருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்ட கூற்று தொடர்பில் விடையளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நியமித்துள்ள விசேட அறிக்கை தொடர்பிலான விவாதத்தின்போது, தமது கட்சி ஆதரவாக அல்லது எதிர்த்து வாக்களிப்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையும் முழு நாட்டிலும் முஸ்லிம் சமுதாயம் பெரும் கவலையுடனும், பதற்றத்துடனும், பெரும் எதிர்ப்பார்ப்புக்களுடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அரசியல் தலைவராக இருந்தபோதும் அதிலிருந்தும் அவர்களை மீட்ட முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, சவுதி அரசாங்கத்தின் உதவி கிடைக்கப்பெறுகின்ற முஸ்லிம் அடிப்படைவாதிகள் இலங்கையில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும்போது, அவ்வாறான அடிப்படைவாதிகள் இருப்பார்களானால் அவர்களை இதுவரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவும், பாதுகாப்புப் பிரிவும் கண்டுபிடிக்காதிருப்பது ஏன்? எனவும் வினாதொடுத்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment