ஹட்டன் நகரசபைக்கு ஹட்டன் நீதவான் கடும் எச்சரிக்கை!
ஹட்டன் - டிக்கோய நகரசபையினால் இதுவரை காலமும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த குடாகம எனும் இடத்திலேயே தற்காலிகமாக அடுத்த மாதம் 11 திகதி வரை உக்க கூடிய குப்பைகளை மட்டும் கொட்டுவதற்கும் குப்பைகள் பொதுமக்களுக்கும் சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மண் இட்டு மூடுவதற்கும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிவான் அமில ஆயசேன இன்று (11) உத்திரவிட்டார்.
எனினும், குப்பைகளை கொட்டுவதற்கான தகுந்த இடத்தினை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நகரசபை தலைவருக்கு உத்திரவிட்ட நீதவான், அடுத்த மாதம் 11ம் திகதிக்கு பின் அட்டன் குடாகம பகுதியில் குப்பைகளை கொட்டினால் நகரசபை தலைவா உட்பட ஆளும் கட்சியும் எதிர் கட்சி உறுப்பினர்களுக்கும் வழக்கு தாக்கல் செய்யும்படி நீதிமான் அட்டன் பொலிஸாருக்கு உத்திரவிட்டார்.
அட்டன் வில்பிரட்புர தேயிலை பகுதிக்கு நகரசபையால் கொட்டிய குப்பைகள் பொலிஸாரும் நகரசபை ஊழியர்களும் இணைந்து அகற்றியுள்ளார்கள்.
மேற்படி இடத்திற்கு குப்பைகளை கொட்டிய நகரசபை தலைவரையும் மக்கள் சுகாதார கண்காணிப்பாளரையும் கைது செய்ய கூறி தோட்ட தொழிலாளிகள் இன்று அட்டன் நகரசபை முன்னாலும் அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment