மாணவனின் செவிப்பறை வெடிக்கும் அளவிற்கு; தாக்குவதற்கு ஆசிரியருக்கு அதிகாரம் கொடுத்தது யார் ? யாழில் சம்பவம்
ஆசிரியரின் தாக்குதலினால் காதுகேட்கும் தகவினை இழந்த பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ந.கதீசன் யாழ்.போதனாவைத்திய சாலையில் கடந்த ஆறுநாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளான். 2014ம் ஆண்டு கணிதப்பிரிவில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தவறு புரிந்ததாகக்கூறி கடந்த திங்கட்கிழமை பாடசாலையில் பரீட்சை இடம்பெற்றிருந்த வேளை ஆசிரியர் ஒருவர் பரீட்சை மண்டபத்திற்குள் நுளைந்து குறித்த மாணவனை பலமாகத்தாக்கியுள்ளார்.
குறித்த மாணவன் தான் புரிந்தது குற்றமெனில் பாடசாலை அதிபர் முன்னிலையில் பகிரங்க மன்னிப்புக்கோறுவதாகக் கூறியபோதும் தாக்கிய ஆசிரியர் அவ்விடத் தைவிட்டுச் சென்று பின்பு மீண்டும் வந்து அதே மாணவனை தாக்கியுள்ளார். இதன் பயனாக தற்போது குறித்தமாணவனின் ஒருபக்க காதுச் செவிப்பறை வெடித்து கேட்கும் தன்மையை இழந்துள்ளது.
தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் தொடர்பினில் கல்வி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ள வில்லையெனத் தெரியவருகின்றது. இருப்பினும் சம்பவம் தொடர்பினில் கடந்த 20ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் பெற்றோரினால் முறையிடப்பட்டுள்ளதோடு வைத்தி யசாலைத் தரப்பினர் மாணவனின் எதிர்காலம் கருதி பொலிசாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment