அதிக பனிமூட்டம் சாரதிகள் அவதானம் ( படங்கள் கிஷாந்தன்)
மலையகப்பகுதிகளில் இன்று மாலை வேளையில் இருந்து தற்போது வரை அதிக பனிமூட்டம் காணப்படுகி;ன்றது. அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதன் காரணமாக வாகனங்களை செலுத்துவதற்கு மிகவும் சிரமமாக காணப்படுவதாகவும் இதனால் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, அட்டன், கினிகத்தேன போன்ற பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் மற்றும் அட்டன் நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment