சர்வதேசத்துக்கே ஹெரோயின் வழங்கிய இலங்கையர் ஒருவர் பஞ்சாப்பில் கைது!
இலங்கையர் ஒருவர் இந்தியாவிலிருந்து முழு உலகிற்கும் ஹெரோயின் போதைப் பொருள் விநியோகித்து வந்தார் என்ற தகவலின்படி, இந்திய பஞ்சாப் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபருடன் இன்னும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரியவருகின்றது.
115 கோடி இந்திய ரூபா பெறுமதியான 23 கிலோ கிராம் போதைப் பொருள் அவர்களிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதி சொகுசு வாகனங்களை உபயோகித்து இந்தப் போதைப் பொருள் விநியோகத்தை மேற்கொண்டு வந்திருக்கின்ற குறித்த குற்றவாளிகளிடமிருந்து 75 இலட்சம் இந்திய ரூபா பணம் மற்றும் துப்பாக்கிகள் பலவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment