ஜனாதிபதித் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்! - சோபித்த தேரர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிகள் பலவற்றுடன் தான் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடுகிறார்.
அதற்கேற்ப, ஐக்கிய தேசியக் கட்சி, பொன்சேக்கா, மக்கள் விடுதலை முன்னணி, ஹெல உறுமய ஆகியவற்றுடன் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகக் குறிப்பிடும் தேரர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் கலந்தாலோசனைக்கு நேரம் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment