Saturday, June 14, 2014

இலங்கை இராணுவத்துக்கு ஜப்பானிய அரசினால் தீயணைப்பு வாகனம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவின் வெளிப்பாடாக ஜப்பான் அரசு இலங்கை இராணுவப்படைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.

இந் நிகழ்வு இலங்கை இராணுவ தலைமையக உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (ஜூன் 11) நடைபெற்றது.

குறித்த வாகனத் திறப்பினை இலங்கை இராணுவப்படை செயலணியின் முக்கிய உறுப்பினரான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவிடம் ஜப்பான் குழுவின் சார்பில் அதன் தலைவர் திரு. ஹிரோசிங் ஒசகாவா கையளித்தார்.

இந்நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com