Wednesday, June 25, 2014

மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம் ; கட்டுநாயக்கவில் விமானம் அவசர தரைறயிறக்கம்

சவூதி அரேபியாவிலிருந்து மலேஷியா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததால் அவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம் பெற்றதாக மலேஷியாவின் பேர்னமா இணையத்தளம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் பிளைனாஸ் நிறுவன த்துக்குச் சொந்தமான இவ்விமானம் சவூதி அரேபியாவில் உம்றா கடமைகளை நிறைவு செய்துகொண்டு தாயகம் திரும்பும் யாத்திரிகர்கள் உட்பட சுமார் 350 ஏற்றிக்கொண்டு ஜெத்தா நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம் பெற் றுள்ளது.

இவ்விமானம் இலங்கை வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது 46 வயதான ஸலேஹா சல்லாஹ் எனும் பெண் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில், இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிற க்கப்பட்டது. இவ்விமானத்தின் ஏனைய பயணிகள் 12 மணித்தியால தாமதத்தின்பின் கோலாலம்பூரை சென்றடைந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்படுவதாகவும் றேஹார் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹடூன் அஹ்மு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com