ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் பலர் நீக்கப்படுவர்!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தொகுதிகள் பலவற்றின் அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிப்பதில் கவனம் எடுக்கப்பட்டள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் மற்றும் தொகுதிகளில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக ஸ்ரீசுக ஒழுங்குசெய்திருந்த கூட்டத்தின்போது, அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களைக் கருத்திற்கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
தொகுதிகள் பலவற்றின் அமைப்பாளர்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தின்போது, அமைப்பாளர்கள் பலரினதும் நடத்தைகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் சூடுபிடித்தாக தெரியவருகின்றது.
அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உயர்பீடத்திற்கு தெரிவிக்கப்படும் என கூட்டத்திற்கு வருகை தந்திருந்த கட்சியின் உயர்மட்டக் குழு பிரதிநிதிக்குத் தெரிவித்துள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment