போர்க் குற்ற விசாரணை நடாத்த இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கப்பட வேண்டும்! - அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் போர்க் குற்ற விசாரணை நடாத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இலங்கைக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்கா குறிப்பிடுகின்றது.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அமெரிக்க பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டார்.
தமது நாட்டின் பிரேரணைக்கு ஏற்ப விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளோம். விசாரணைகளை ஆரம்பித்த்து தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடும்போது, இலங்கை அரசாங்கம் போர்க் குற்ற விசாரணை நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment