ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பூரண பிரச்சார நடவடிக்கைகளை அடுத்த மாதம் ஜூலை இறுதியில் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக உள்ளிடத்துச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதற்காக ஏற்கனவே குறித்த பிரதேசங்களில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment