இந்த அரசாங்கத்திற்கு முடியாதுவிட்டால் புதிய அரசாங்கமான்று அமைப்போம்!
“நாடு செய்ய வேண்டியன” கொள்கைத் திட்டத்திற்கு சரியான ஆதரவு கிடைக்காது விட்டால், அரசாங்கத்திற்கு மாற்றீடு செய்ய வேண்டியேற்படும் என ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிடுகிறார்.
குறித்த கொள்கைத் திட்ட அறிக்கையை மல்வத்து மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் கையளிக்கச் சென்றவேளை, அங்குகூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெகுவிரைவில் இக்கொள்கைத் திட்ட அறிக்கையை சகல சமய மதகுருமார்களுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment