இலங்கைக்கு எதிராக ராஜதந்திர ரீதியிலான ஆளில்லா விமான தாக்குதலை நடத்துகின்றது ஐ.நா விசாரணைக் குழு!
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ராஜதந்திர ரீதியிலான ஆளில்லா விமான தாக்குதலை நடத்துகின்றது என இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியும் சிரேஷ்ட அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத கலவரங்களும் இந்த குழுவின் விசாரணைகளுக்கு பரிந்துரைக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு சாதகமாக அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு கண்டனம் வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை, கொழும்பு அரசாங்கம் அனைத்து சிறுபான்மை மதத்தினரை பாதுகாக்க வேண்டும் அழைப்பு விடுத்திருந்துடன் அஸ்மா ஜஹாங்கீரை நிபுணர்கள் குழுவின் உறுப்பினராக நியமித்திருந்தாக ஜயலதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசாவில் இடம்பெற்ற மோதல்களில் இடம்பெற்ற மீறல்களை கண்டறிய ஐ.நா ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் என்ற ஒரு நபரை மட்டுமே நியமித்திருந்தது. எனினும் இலங்கை மீதான விசாரணைகளுக்கு மூவர் கொண்ட குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நியமித்துள்ளது. இந்த குழு மிகவும் வலுவானதும் கனத்தை எடையையும் கொண்டது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment